4-வது முறையாக ஜெர்மனி அதிபரானார் ஏஞ்சலா மெர்க்கல்

4-வது முறையாக ஜெர்மனி அதிபரானார் ஏஞ்சலா மெர்க்கல்
Updated on
1 min read

ஜெர்மன் அதிபர் தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் வெற்றி பெற்றார். இதன்மூலம் 4வது முறையாக அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெர்மனி அதிராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல்லின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்க்கல்லுக்கும், சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்டின் ஷூல்ச்சுக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் 33% சதவித ஓட்டுகள் பெற்று  ஏஞ்சலா மெர்க்கல்  மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் மார்டின் ஷுல்ஸுக்கு 20% வாக்குகளும் கிடைத்தன.

வெற்றி பெற்றது குறித்து மெர்க்கல் கூறும்போது "என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி. எனினும் இந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை" என்றார்.

4-வது முறையாக ஜெர்மனி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்க்கலுக்கு  உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in