கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கடலுக்குள் தள்ள முயற்சி

கரை ஒதுங்கிய திமிங்கலத்தை கடலுக்குள் தள்ள  முயற்சி
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் புகழ்பெற்ற கோல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள பாம் பீச்சில் 2 வயதுடைய ஹம்ப்பேக் வகை திமிங்கலம் ஒன்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

மணல் திட்டில் சிக்கிக் கொண்ட அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த திமிங்கலத்தை கடலுக்குள் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லை.

எனினும், திமிங்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் விரைவில் அதை கடலுக்குள் தள்ளி விடுவோம் என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த சீ வேர்ல்டு இயக்குனர் டிரெவர் லாங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in