

பிரேசிலில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பல நொறுங்கின. இந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் கட்டுமான நிலையில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடந்து வரும் பிரேசிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதற்காக, பிரேசிலின் தென்மேற்கில் உள்ள மினாஸ் ஹெரியாஸ் பகுதியில் நகர்ப்புற போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
ஆனால், உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன், அந்த மேம்பாலக் கட்டுமானத்தை முடிக்க முடியவில்லை. இதனால், கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் கிழே சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இதில் சிக்கி நசுங்கின.
சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, சரக்கு லாரி மற்றும் ஒரு கார் முற்றிலும் சேதமானதாகவும், அதில் பயணித்த இருவர் பலியானதாகவும், ஒரு குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேம்பாலத்தின் இடுபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் அனைவரும், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.