Published : 05 Sep 2017 10:11 AM
Last Updated : 05 Sep 2017 10:11 AM

உலக மசாலா: மிளகாய் ராணி!

க்

ளிப்ஃடன் மிளகாய் சாப்பிடும் க்ளப் இங்கிலாந்தில் மிகப் பிரபலமானது. இங்கே நடைபெறும் மிளகாய் சாப்பிடும் போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும், மிளகாயின் காரம் அதிகரிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்வது எவ்வளவு பெருமையானதோ, அதேபோல் கடினமானதும்கூட. நடுத்தர வயதில் உள்ள சிட் பார்பர் என்ற பெண், 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் போட்டியில் தன் ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாகச் செலுத்தி வருகிறார். ‘தோற்கடிக்க முடியாத சிட்’ என்று இவரை எல்லோரும் அன்புடன் அழைக்கிறார்கள். காரத்தை விரும்புகிறவர்கள் எல்லாம் இந்தப் போட்டியில் எளிதாக வென்றுவிட முடியும் என்று சொல்லிவிட இயலாது. ரெட் ஃப்ரெஷ்னோ, ஜலபெனோ போன்ற மிளகாய்களைச் சாப்பிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது. போட்டியின் ஒவ்வொரு சுற்றுக்கும் காரத்தின் தன்மை அதிகரிக்கப்படும். காரத்தைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பலரும் வெளியேறிவிட, இறுதிச் சுற்றில் சிலர் மட்டுமே கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு உலகிலேயே மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் வழங்கப்படும். இதையும் சாப்பிட்டு முடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிவருகிறார் சிட் பார்பர். “இது மிகக் கடினமான போட்டி. மிளகாய் சாப்பிடும்போது காரத்தைத் தாங்க முடியாமல் தண்ணீர் குடித்துவிட்டால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பலரும் காரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே போட்டியில் பங்கேற்பார்கள். காரத்தைத் தணிக்க பாலைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேகமாக மிளகாய்களைச் சாப்பிட்டுவிடுவேன். இந்தப் போட்டி பணத்துக்காகக் கலந்துகொள்ளும் போட்டி இல்லை. 4,500 ரூபாய்தான் பரிசுப் பணம். காரத்தின் பின்விளைவுகளைச் சரி செய்வதற்கே இந்தப் பணம் போதாது. சவால்களை விரும்புகிறவர்களும் வலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களும் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் ” என்கிறார் சிட் பார்பர்.

மிளகாய் ராணி!

ருகாலத்தில் ஜப்பானில் போஸோஜோகு என்ற குழுவினர் இரு சக்கர வாகனங்களை வைத்துக் கொண்டு பலவிதமான காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். நகரின் வீதிகளில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வது, டிராபிக் சிக்னலை மீறுவது, வாகனத்தின் ஒலி அளவை அதிகரிப்பது போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளே மக்களிடம் நிலவிவந்தது. 2000-வது ஆண்டுக்குப் பிறகு அந்தக் குழு தன்னை மாற்றிக்கொண்டது. சட்டத்தை மீறி எதுவும் செய்வதில்லை. சமீபத்தில் இந்தக் குழுவில் இருப்பவர்கள் இருசக்கர வாகனங்களின் க்ளட்சை வெவ்வேறு விதங்களில் இயக்கி, இசையை உருவாக்கிவருகிறார்கள். இந்த வாகன இசையைக் கேட்பதற்காக தெருக்களில் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். 4, 5 பேர் வாகனங்களுடன் வருகிறார்கள். ஓர் இடத்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் விதவிதமான இசையை உருவாக்கிக் காட்டுகிறார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு இசைத்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டுச் சென்று விடுகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் இசை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x