பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து சவுதி அரசர் உத்தரவு

பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து சவுதி அரசர் உத்தரவு
Updated on
1 min read

சவுதியில் பெண்கள் கார் ஒட்ட அனுமதி அளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்தி சவுதியின் அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஏ வெளியிட்ட செய்தியில், "சவுதியில் பெண்கள் கார் ஒட்டுவதற்கு அனுமதி அளித்து சவுதி அரசர் சல்மான் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை முப்பது நாட்களுக்குள் வழங்குமாறும் அமைச்சரவை குழுவுக்கு அரசர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

சவுதியில் பெண்களுக்கு எதிராக பலவிதமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது, கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையாகும். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், சவுதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதனைக் கண்டித்து சவுதி மீது பல விமர்சனக்கள் எழுந்தன.

இந்தத் தடைக்கு எதிராக, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் வந்தன.

 இந்நிலையில், சவுதி அரச பரம்பரையில் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இளவரசர் அல்வாலீத் பின் தலால், இப்பிரச்சினைக்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து சவுதி அரசர் உத்தரவிட்டுள்ளார்

சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in