Published : 19 Sep 2017 12:00 PM
Last Updated : 19 Sep 2017 12:00 PM

பெரும்பாலான ரோஹிங்கியா கிராமங்களில் வன்முறை இல்லை: ஆங் சான் சூச்சி

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான கிராமங்கள் வன்முறை இல்லாமல் முன்பு இருந்தபடிதான் உள்ளன என்று மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராகவுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து  வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு குடிபெயர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்காமல் இருந்ததற்காக ஆங் சான் சூச்சிக்கு எதிராக உலக முழுவதும் கண்டன குரல்கள் பதிவாகின.

இந்த நிலையில் இது தொடர்பான விளக்கம் ஒன்றை தொலைக்காட்சி மூலம் அளித்துள்ளார் ஆங் சான் சூச்சி.

அதில் சூச்சி பேசியிருப்பதாவது, "சில ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றத்தை வைத்து உலக நாடுகள் விமர்சனம் வைக்கின்றன. மியான்மரில் பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் முன்பு இருந்தது போலவே வன்முறை இல்லாமல்தான் உள்ளன.

சர்வதேச நாடுகள் வன்முறை ஏன் எல்லா இடங்களிலும் பரவவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மியான்மரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைள் குறித்து சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கும்  கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வன்முறையால் பாதிக்கப்படவில்லை. வேண்டும் என்றால் அப்பகுதிகளுக்கு  வெளி நாடுதூதர்கள் சென்று பார்வையிடலாம். அனைத்து மக்களும் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பாதிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.

வங்கதேசத்துக்கு சென்றுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கையை  எங்களை கவலையடைச் செய்துள்ளது.

வெறுப்பு மற்றும் அச்சம் நம் உலகத்திலுள்ள  முக்கிய துன்புறுத்தல் காரணிகள்.  மத அடிப்படையில் மியான்மர் பிரிவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் அடையாளங்கள் பற்றிய அனைத்து உரிமையும் எங்களுக்கு உண்டு” என்றார்.

மேலும் ராக்கைன் மாநிலத்தில் நடத்த மனித உரிமை மீறல் செயல்களுக்கு சூச்சி கண்டனம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x