Published : 04 Apr 2023 02:57 PM
Last Updated : 04 Apr 2023 02:57 PM

‘வரலாற்றுத் தருணம்’ - நேட்டோவில் பின்லாந்து இணைவதால் ரஷ்யாவுக்கு நெருக்கடி

பிரஸ்ஸல்: நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய இருப்பதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறும்போது, “நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாரம். வரும் மாதங்களில் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ அலுவலக கட்டிடத்தில் பின்லாந்து கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

நேட்டோவில் இணைவது குறித்து பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஹவிஸ்டோ பேசும்போது, “இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். பின்லாந்தைப் பொறுத்தவரை, ரஷ்யா தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்வதால், உக்ரைனின் நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. யூரோ - அட்லாண்டிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேட்டோவுடன் உக்ரைன் இணைவதை எதிர்க்கும் வகையில்தான் உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான பின்லாந்து இப்போது நேட்டோவில் இணைய உள்ளது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

நேட்டோ என்றால் என்ன? - நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949-இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x