Last Updated : 30 Sep, 2017 12:52 PM

 

Published : 30 Sep 2017 12:52 PM
Last Updated : 30 Sep 2017 12:52 PM

ட்ரம்ப் அழுத்தம்: சுகாதாரத்துறை செயலாளர் ராஜினாமா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தின் காரணமாக சுகாதாரத்துறை செயலாளர் டாம் பிரைஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த டாம் பிரைஸ் பயணச் செலவுகள் குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், டாம் மீதான பயண செலவு முறைகேடுகள் தொடர்பாக அவர் மீது விசாரணை நடந்த ட்ரம்ப் தூண்டப்பட்டார்.

பயண செலவுக்கான வருத்தத்தை பிரைஸ், ட்ரம்பிடம் தெரிவித்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

டாம் பிரைஸ் தனது பதவியை ராஜினாமா செய்த ஒருமணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "டாம் ஒரு சிறந்த மனிதர். ஆனால், டாம்மின் நடவடிக்கைகள் என்னை ஏமாற்றமடைய செய்துள்ளன. குறைந்த செலவில் பயணங்கள் மேற்கொள்ள டாம்முக்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் விலையுயர்ந்த பயணங்களையே அவர் தேர்வு செய்துள்ளார்" என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தில் சுமார் 7 மாதங்கள் சுகாதாரத்துறை செயலாளராக டாம் பிரைஸ் பணிபுரிந்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்தது குறித்து டாம் பிரைஸ் தந்து ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க மக்களுக்கு பணி புரிவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு அளிக்கப்பட்ட மரியாதை" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x