Last Updated : 06 Sep, 2017 02:22 PM

 

Published : 06 Sep 2017 02:22 PM
Last Updated : 06 Sep 2017 02:22 PM

 மோடி - ஆங் சான் சூச்சி சந்திப்பு

மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சியை சந்தித்தார்.

சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி அடுத்ததாக மியான்மர் நாட்டுக்கு இன்று (புதன்கிழமை) சுற்றுப்பயணம் சென்றார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இந்தியா - மியான்மர் உறவை சீர்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் இடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார், "பிரதமர் நரேந்திமோடி மதிப்புமிக்க நண்பரான மியான்மர் தலைலவர் ஆங் சாங் சூச்சியை சந்தித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சட்ட விரோரதமாக தங்கியுள்ள சுமார் 40,000க்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்த மத்திய ஆலோசனை நடத்தி வருகிறது எனவே இதுகுறித்தும்,

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா - மியான்மர் இடையே பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், முதலீடு, கட்டமைப்பு, கலாச்சாரம், உழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் ஆற்றல், மற்றும் கலாச்சாரம், குறித்தும் பிரதமர் மோடி  இந்தச் சந்திப்பில் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x