ஐ. நா. பொதுக் கூட்டத்தில் ஆங் சான் சூச்சி பங்கேற்கவில்லை

ஐ. நா. பொதுக் கூட்டத்தில் ஆங் சான் சூச்சி பங்கேற்கவில்லை
Updated on
1 min read

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து சூச்சி மீது நெருக்கடிகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில்  ஐ. நா, பொதுச் சபை கூட்டத்தில் ஆங் சான் சூச்சி கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் ஆங் சான் சூச்சி கலந்து கொள்ளவில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ராக்கை மா காணத்தில் தற்போதைய நிலைமை மற்றும் தீவிரவாத தாக்குதலை கவனத்தில் கொண்டு ஐ.நா பயணத்தை சூச்சி ரத்து செய்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

மியன்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த பகுதியைவிட்டு வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் நடக்கும் வன்முறைகள் குறித்து ஐ. நா சபை, உலக தலைவர்கள் பலரும் ஆங் சான் சூச்சியிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கான பதிலை ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் ஆங் சான் சூச்சி தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சூச்சி ஐ. நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in