பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: இலவச கோதுமை மாவுக்காக பாகிஸ்தான் மக்கள் மோதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது.

அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

வீடியோ வைரல்

கோதுமை மாவு விநியோகிக் கும் லாரியின் மீது ஏறி அதைப் பெறுவதற்கு பொதுமக்கள் அவசரப்பட்டனர். ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு லாரி மீது ஏறி மாவை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விநியோக மையத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே பொதுமக்கள் அந்த லாரியை மடக்கி கோதுமை மாவை பறித்தவிஷயம் பின்னர்தான் தெரியவந் துள்ளது.

இதனிடையே இலவச கோதுமை மாவை பெறுவதற்காக சென்ற பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்த விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிரிழந்த 4 பேருமே முதியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பல்வேறு இடங்களில் இந்த உயிரிழப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in