

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சித் தலைவர் முகமது பட்டி உள்பட 37 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 10 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது.
முன்னாள் அதிபர் முகமது மோர்சி கடந்த ஆண்டு ராணுவத் தால் பதவி நீக்கம் செய்யப்பட் டதைக் கண்டித்து பட்டி தலைமை யிலான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வன்முறையில் ஈடுபட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்தி நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்தது.
மோர்சி பதவி நீக்கம் செய் யப்பட்டதையடுத்து, கடந்த ஜூலை மாதம் பிரதிவாதிகள் வன் முறையில் ஈடுபட்டதுடன் பலரது கொலைக்கு காரணமாக இருந் துள்ளனர்.
எனவே, 37 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி ஹசன் பரிட் தெரிவித்தார்.
மேலும் இதே குற்றச்சாட்டின் கீழி 2 வெவ்வேறு வழக்குகளில் பட்டிக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து 10 பேர் மேல் முறையீடு செய்திருந்தனர். இவர்களது மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், மரண தண்டனையை உறுதி செய்தது. இவர்களில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கு முன்பு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து நீதிமன்றங்களுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.