Published : 19 Mar 2023 05:50 PM
Last Updated : 19 Mar 2023 05:50 PM

உக்ரைனின் மரியுபோலில்  ரஷ்ய அதிபர் புதின்..!

மரியுபோலில் புதின்

மரியுபோல்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக, மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு புதின் திடீரென பயணம் செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது. சனிக்கிழமை இரவு மரியுபோல் பகுதிக்கு காரில் சென்ற புதின், அங்கிருந்த மக்களுடன் உரையாடியதாக ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் மரியுபோல் நகரத்தை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைபற்றிய பிறகு புதின் மேற்கொண்ட முதல் பயணமாக இது கருதப்படுகிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வாசிக்க: மூன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: ஒரு தெளிவுப் பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x