

உயரமாக இருப்பவர்களுக்கு நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாலர்கள் நடம்பு ரத்தக்கட்டு பாதிப்பு உயரமானவர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த ரத்தக்கட்டு நரம்பில் ஆரம்பிக்கும்.
6 அடி 2 அங்குலம் உயரமுடையவர்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வாய்ப்புகள் அதிகம் 5 அடி 3 அங்குலம் உயரத்துக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு என்கின்றது இந்த ஆய்வு.
அதே போல் பெண்களில் 5 அடி 1 அங்குலம் உயரத்துக்குக் குறைவானவர்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வாய்ப்பு குறைவு, அதே 6 அடி உயரமுள்ள பெண்களுக்கு ரத்தக்கட்டு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
இத்தகைய ரத்தக்கட்டுகள் பொதுவாக கால்களில் ஏற்படும், இந்த ரத்தக்கட்டு நுரையீரல் வரை பயணிக்கக் கூடியதாகும் சில வேளைகளில் இருதயம் வரை கூட இது செல்லக்கூடியதாகும். பொதுவாக நடைப்பயிற்சி கெண்டைச் சதை பயிற்சிகள் இது வராமல் தடுக்கக்கூடியவை.
இதற்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் சிகிச்சையே பிரதானமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஊசிமருந்து மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இத்தகைய சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வு Circulation: Cardiovascular Genetics-ல் வெளியாகியுள்ளது.