Published : 17 Mar 2023 05:50 PM
Last Updated : 17 Mar 2023 05:50 PM

அதிசயம் நிகழ்த்தும் துருவ ஒளிகள்... - ஒரு பார்வை

பூமியின் வடக்கும், தென் துருவ பகுதிகளில் ஒன்றை மற்றொன்று துரத்தி ஓடிக் கொண்டிருக்கும், வட்டமடித்துக் கொண்டிருக்கும் துருவ ஒளிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.. எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த துருவ ஒளிகள் வழக்கத்துக்கு மாறாக பூமியின் சில பகுதிகளிலும் தோன்றவுள்ளன.

அதாவது, பூமியிலிருந்து சூரியனின் வெகு தொலைவு பகுதியில் ஏற்படும் ஒளிவட்ட நிகழ்வுகளால், பூமியின் வடக்கு பகுதிகளில் உலவிக் கொண்டிருக்கும் துருவ ஒளிகள் தெற்கு வரை சில நாட்கள் விரிவடைய உள்ளன. இந்த நிகழ்வுகள் 10 வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது இரு முறையோ நடக்கின்றன என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக துருவ ஒளிகள் கனடா வரை தெரியவுள்ளன. மேலும், அமெரிக்காவின் 48 மாகாணங்களிலும் துருவ ஒளிகள் தெரியவுள்ளன. நியூயார்க் நகர மக்களும் துருவ ஒளிகளை ரசிக்க உள்ளனர். துருவ ஒளிகளின் இந்த நீண்ட பயணத்தினால் ஏற்படும் உயர்ந்த புவி காந்த செயல்பாடினால் வானொலி அலைவரிசை மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

துருவ ஒளிகள், பூமியின் மேற்பரப்பில் 64 டிகிரி மற்றும் 70 டிகிரி வடக்கு அட்சரேகைகளுக்கு இடையில் அடிக்கடி நிகழ்கின்றன. அதாவது ஆர்க்டிக், அலாஸ்கா, வடக்கு கனடா, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யாவில் உள்ள லாப்லாண்ட் ஆகிய இடங்களில் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உச்சபட்ச காட்சிகளாக தெரியும்.

அரோரா என்ற அழைக்கப்படும் இந்த துருவ ஒளிகள் பூமியின் துருவப் பகுதிகள் முழுவதும் நீள்வட்ட வடிவத்தில் தெரியும். இருப்பினும், புவி காந்த புலங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அதற்கேற்ப துருவ ஒளிகள் தெற்கு நோக்கி நீளும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

துருவ ஒளி (அரோரா) எப்படி தோன்றுகிறது? - பூமிப் பந்தின் மேலடுக்கில் காணப்படும் ‘அயன்’ (Ion) என்றழைக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் பூமியின் காந்த புலத்தின் மிது மோதும்போது இந்த துருவ ஒளிகள் ஏற்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x