மியான்மரில் நடப்பது ஒட்டுமொத்த இன அழிப்புக்கான பாடப் புத்தகச் சான்று: ஐ.நா

மியான்மரில் நடப்பது ஒட்டுமொத்த இன அழிப்புக்கான பாடப் புத்தகச் சான்று: ஐ.நா
Updated on
1 min read

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் இன அழிப்புக்கான பாடப் புத்தகத்திலுள்ள எடுத்துகாட்டு போல் உள்ளது என்று ஐ.நா.மனித உரிமைகளுக்கான சையத் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை குழு அமர்வுக்கான கூட்டத்தில் சையத் அல் ஹூசைன் இதனை தெரிவித்தார்.

இதில் ஹுசைன் பேசியதாவது, "மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி நடந்து கொண்டிருக்கிறது. மியான்மரில் ஐ. நாவின் ஆய்வாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது மியான்மரில் நடப்பவை இன அழிப்புக்கான பாடப் புத்தக எடுத்துகாட்டு போல் உள்ளது.

கடந்த இரு வாரத்தில் மட்டும் 2,70,000 பேர் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். மியான்மரில் உள்ளூர் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் ரோஹிங்கியா பகுதிகளை தீயிட்டு கொளுத்தியுள்ளதற்கான செயற்கைகோள் படங்கள் உள்ளன” என்பதை சுட்டிக் காட்டினார்.

மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த் வன்முறை சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in