

இராக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை இன்று கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக ஐ. நா. அறிவித்துள்ளது.
சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா (லெவன்ட்) என்ற கிளர்ச்சிப் படை (ஐ.எஸ்.ஐ.எஸ்.) இராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இராக், சிரியா நாடுகளில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அந்த கிளர்ச்சிப்படை தனி நாடாக அமைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று, இராக்கின் எல்லையில் உள்ள பவுகமால் என்ற சிரியாவின் எல்லை நகரம் கைப்பற்றப்பட்டதாக அங்கிருக்கும் ஐ.நா.வின் கண்காணிப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளிலும் இருக்கும் சன்னி பிரிவுகளை இணைத்த தனி நாடு ஒன்றை உருவாக்க கடந்த இரு வாரங்களாக வளம் நிறைந்த நகரங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
முன்னதாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து கிலாஃபத் என்ற இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.