Published : 11 Mar 2023 05:38 AM
Last Updated : 11 Mar 2023 05:38 AM

வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க்கில் ஜெகோவா சாட்சிகள் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

ஹம்பர்க்: ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஹம்பர்க். இந்த நகரில் ஜெகோவா சாட்சிகள் சர்ச் (ஜெகோவா விட்னஸஸ் சர்ச்) உள்ளது. ஜெகோவா பிரிவினர் கிறிஸ்தவத்தில் இருந்து வேறுபட்டு புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராக இவர்கள் கருதப்படுகின்றனர். இந்தப் பிரிவின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகர் வார்விக் பகுதியில் உள்ளது. உலகம் முழுக்க இப்பிரிவில் 87 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஜெர்மனியில் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஹம்பர்க் பகுதியில் உள்ள ஜெகோவா சாட்சிகள் சர்ச்சில் நேற்றுமுன்தினம் காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதில்,7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஹம்பர்க் போலீஸார் கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடியதாக தெரியவில்லை. அவரும் இறந்திருப்பார் என்று தெரிகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடக்கிறது’’ என்றனர். இதனால் ஹம்பர்க் நகரில் பதற்றம் நிலவுகிறது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x