தீவிரவாதக் குழுக்களைப் பற்றிய பிரிக்ஸ் அறிக்கை: பாகிஸ்தானின் குழப்பமான எதிர்வினை

தீவிரவாதக் குழுக்களைப் பற்றிய பிரிக்ஸ் அறிக்கை: பாகிஸ்தானின் குழப்பமான எதிர்வினை
Updated on
1 min read

பாகிஸ்தான் நாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாதக்குழுக்களைச் சுட்டிக்காட்டி பிரிக்ஸ் உச்சி மாநாட்டு தீர்மானத்தில் ஆசியப் பகுதி பாதுகாப்பு குறித்து கவலை அறிக்கை வெளியிட்டதற்கு பாகிஸ்தான் குழப்பமான ஆனால் எச்சரிக்கையுடன் எதிர்வினையாற்றியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா இது குறித்து அறிக்கை வெளியிட்டபோது, “ஆப்கானில் செயல்படும் டிடிபி, அதன் கூட்டாளிகளான ஜமாதுல் அஹ்ரார் உட்பட பல பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தான் மக்கள் மீது மிகவும் தீவிரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது மேலும் நாங்கள் டாயேஷ் (ஐஎஸ்), இடிஐஎம், ஐஎம்யு ஆகிய பயங்கரவாதக் குழுக்களின் இருப்பு குறித்தும் ஆழமாகக் கவலையடைந்துள்ளோம். இவர்களால் இப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளது.

ஆனால் பிரதானமாகக் குறிப்பிட வேண்டிய, அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானைச் சாடி வரும், ஹக்கானி நெட்வொர்க், லஸ்கர் இ தாய்பா, ஜேஇஎம், ஆகிய தீவிரவாத அமைப்புகள் குறித்து இவரது அறிக்கையில் எந்த வித குறிப்புகளும் இல்லை. இவர்கள் மீதுதான் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் இவை பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடாதது ஆச்சரியமளித்தது என்பதை விட குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் இப்பகுதியில் தீவிரவாதக் கொள்கைகள் வளர்ந்து வருவதும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுதலையும் இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல்வாதியும் பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான ஷெரி ரஹ்மான் பிரிக்ஸ் அறிக்கையில் ஆச்சரியமொன்றுமில்லை என்று கூறியதோடு, “அனைத்து நாடுகளும் தங்கள் நலனில் கவனம் செலுத்துகின்றன. பாகிஸ்தான் தன் கவலையைப் பார்க்கிறது” என்றார்.

முன்னதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் கான் பயங்கரவாதம் குறித்த பிரிக்ஸ் தீர்மானத்தை நிராகரிப்பதாகக் கூறியதாக ஜியோ டிவி செய்தி ஒன்றில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in