

மெக்சிகோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 248 பேர் பலியாகினர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவாகியது. மெக்சிகோ சிட்டி உட்பட 44 இடங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 248 பேர் பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் பாதிப்பின் காரணமாக மெக்சிகோவில் பள்ளி அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு குறித்து மெக்சிகோ அதிபர் பினா நியாட்டோ கூறும்போது, "நாங்கள் நாட்டின் புதிய அவசர நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நிலநடுக்கப் பகுதிகளில் ராணுவம் மற்றும் மீட்புப் பணியினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.
மெக்சிகோவில் 1985ஆம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் குறிப்பிடத்தக்கது.