பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி - வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி - வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ உணவகங்களிலும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட முறையாக வழங்க முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பீல்டு கமாண்டர்கள் குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதையடுத்து, உணவுப்பொருள் விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக சரக்குப் போக்குவரத்து தலைமை அதிகாரி மற்றும் ராணுவ இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in