கடலில் படகு மூழ்கி 24 பாகிஸ்தானியர் உயிரிழப்பு

கடலில் படகு மூழ்கி 24 பாகிஸ்தானியர் உயிரிழப்பு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது: துருக்கியில் இருந்து புறப்பட்ட மரப் படகில் ஈரான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் களுடன் பாகிஸ்தானியர்களும் ஐரோப்பாவுக்கு புலம் பெயர ஆசைப்பட்டு சென்றுள்ளனர். தெற்கு இத்தாலி கடற்கரை அருகே பாறைகளில் மோதிய அந்தப் படகு கடலுக்குள் நேற்று முன்தினம் மூழ்கியது. இதில், 59 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதில், 24 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இதனிடையே இத்தாலிய அதிகாரிகள் கூறுகையில், “ புலம் பெயர்ந்தவர்களை ஏற்றி வந்த படகு இத்தாலி கடல் பகுதியில் மூழ்கியதில் அதிலிருந்த 81 பேர் மீட்கப்பட்டனர். 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டார்" என்று தெரிவித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரை அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் மத்திய தரைக் கடல் பகுதியில் மூழ்கியதில் 17,000 பேர் வரை இறந்துள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. நடப் பாண்டில் இதுவரை 220-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள தாக ஐ.நா.தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in