

உள்நாட்டில் வறுமையும், பசியுமே எஞ்சியிருப்பதால்தான் மக்கள் வேறு நாடுகளுக்கு பெரிய அளவில் அகதிகளாகச் செல்கின்றனர் என்று வெள்ளிக்கிழமை வெளியான ஐநா அறிக்கை ஒன்று கூறுகிறது.
அடுத்தடுத்து 4 பெரிய பஞ்சம் சமீப வரலாற்றில் இல்லாதது, உணவுப் பாதுகாப்பின்மை ஒவ்வொரு சதவீதம் அதிகரிக்கும் போதும் ஒரு நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள் தொகை விகிதம் 1.9%ஆக இருக்கிறது. இந்த அறிக்கைதான் வறுமை, பசி ஆகியவற்றுக்கும் புலம்பெயர்வதற்குமான தொடர்பை விளக்கும் ஒட்டுமொத்தமான முதல் அறிக்கை என்று கூறப்படுகிறது.
ஏமன், சோமாலியா, தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் போர்ச்சூழல் காரணமாக சுமார் 2 கோடி மக்கள் வறுமையினால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுதும் 10 கோடிக்கும் அதிகமானோர் போதிய ஊட்டச்சத்து இன்றி வாடிவருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில் தெற்கு சூடான் நாட்டில் சில பகுதிகளில் கடும் பஞ்சம் அறிவிக்கப்பட்டது. 6 ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பஞ்சமாகும் இது. மேலும் வறுமையினால்தான் போர்ச்சூழல் உள்ள நாடுகளில் ஆயுதமேந்திய போராளிக்குழுக்களில் மக்கள் போய்ச்சேருவது அதிகமாகியுள்ளது.
சிரியாவிலிருந்து ஜோர்டானுக்கு புலம் பெயர்ந்த ஒரு பெண் கூறும்போது, “புல்லைத் தின்றுதான் வாழ வேண்டும். என்னுடைய குழந்தைகள் இரவு முழுதும் பசியால் கதறுகின்றனர்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கதறியுள்ளார்.
2015-ல் மட்டும் சுமார் 65.3 மில்லிய மக்கள் மட்டும் தங்கள் சொந்த நாடுகளை விட்டு ஆங்காங்கே புலம் பெயர்ந்து கஷ்டப்பட்டு வருகின்றனர்.
சுமார் 16 லட்சம் அகதிகள் 2014-2016-ல் ஐரோப்பிய யூனியனுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.