விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் 

விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் 
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகபாகிஸ்தான் அமைச்சர்கள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமான பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர்கள், அரசு ஆலோசகர்களின் செலவுகளை 15 சதவீத அளவுக்கு குறைத்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீதப்படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஷெரீப் கூறும்போது, “நாட்டைக் காப் பாற்ற பல்வேறு நடவடிக்கை களைஎடுத்து வருகிறோம். மேலும் 76.4 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு செலவுகளைக் குறைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளோம். தவிர 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடனாகக் கேட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in