

பாகிஸ்தானில் மேலும் 4 தலிபான் தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று விடுத்துள்ள செய்தியில், “ராணுவ நீதிமன்றத் தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 4 தீவிரவாதிகள் தூக்கில் இடப்பட்டனர். இவர்கள், அப்பாவி மக்களைக் கொன்றது, மசூதி மீது தாக்குதல் நடத்தியது, பாதுகாப்பு படைகளைத் தாக்கியது உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர் கள்” என்று கூறப்பட்டுள்ளது.
தூக்கில் இடப்பட்டவர்கள் ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ராணுவம் கூறியுள்ளது. ஆனால் எந்த சிறையில் தூக்கிலிடப்பட்டனர் என்று தெரிவிக்கவில்லை.மேலும் எங்கு விசாரணை நடந்தது?, எப்போது மரண தண்டனை விதிக் கப்பட்டது? போன்ற விவரங் களையும் வெளியிடவில்லை.
பெஷாவர் தாக்குதலுக்கு பிறகு 441 பேரை பாகிஸ்தான் தூக்கில் இட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு கூறுகிறது.