

இராக்கில் ஐ.எஸ். பயங்கர வாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இராக்கின் மேற்குப் பகுதியான ஆன்பர் மாகாணத்துக்கு உட்பட்ட சக்கார் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் மீது ஐ.எஸ். பயங்கர வாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந் தனர். இதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட வீரர்கள் எதிர் தாக்குத லில் ஈடுபட்டனர். இருதரப்பும் இடையிலான இந்த மோதல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதில் இராக் ராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “அதிகாலை வேளையில் ஐ.எஸ். பயங்கர வாதிகள் நடத்திய திடீர் தாக்குத லில் 10 வீரர்கள் கொல்லப்பட் டுள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்” என்றார்.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஆன்பார் மாகாணத்துக்கு உட் பட்ட ருட்பா சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இராக் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அதே பகுதியில் பாதுகாப்புப் படைப் பிரிவு தளத்தின் மீது தற்போது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இராக்கில் ஐ.எஸ். பயங்கர வாதிகள் மூன்றில் ஒரு பகுதி களைக் கைப்பற்றினர். தற்போது சர்வதேச கூட்டுப்படையும், இராக் ராணுவமும் இணைந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பெரும்பாலான பகுதி களை மீட்டு வருகிறது.