Published : 24 Jul 2014 10:48 AM
Last Updated : 24 Jul 2014 10:48 AM

ரஷ்யாவுக்கு பிரிட்டன் ஆயுத ஏற்றுமதி தொடர்கிறது: நாடாளுமன்ற குழு அறிக்கை

ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்களை பிரிட்டன் இன்னமும் ஏற்றுமதி செய்வதாக புதன்கிழமை வெளியான பிரிட்டன் நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு பிரான்ஸ் ஆயுதம் விற்பதை கண்டித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பேசிய சில மணி நேரத்தில் இந்த அறிக்கை வெளியானது.

ரஷ்யாவுக்கு ராணுவ தளவாடங் கள் விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடு களுக்கு கேமரூன் வலியுறுத்தி யிருந்தார். கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங் கள் மற்றும் பயிற்சி வழங்கப் படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். ரஷ்யாவுக்கு ஆயுத ஏற்றுமதியை பிரிட்டன் ஏற்கெனவே நிறுத்தி விட்டதாகவும் கடந்த திங்கள் கிழமை கேமரூன் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு 22.5 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய் வதற்காக 251 உரிமங்கள் ரத்து செய்யப்படாமல் இன்னமும் நடைமுறையில் இருப்பதாக புதன்கிழமை வெளியான நாடா ளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“துப்பாக்கிகள், சிறிய ரக ஆயுதங்கள், கவச உடை, ராணுவ தகவல் தொடர்பு சாதனங்கள், இரவுநேர கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்த உரிமங்கள் அனுமதிக்கின்றன. வெறும் 31 உரிமங்கள் மட்டுமே ரத்துசெய்தும் 3 பொருள்களுக்கு தடை விதித்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என அந்த அறிக்கை கூறுகிறது.

கிழக்கு உக்ரைனில் மலேசி யன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நிலைப் பாட்டை கேமரூன் எடுத்துவருகிறார். ரஷ்யாவுக்கு 2 போர்க் கப்பல்கள் சப்ளை செய்யும் உடன்பாட்டை தொடருவது என்ற பிரான்ஸின் முடிவு குறித்து அமெரிக்காவும், பிரிட்டனும் கேள்வி எழுப்பின.

இந்நிலையில் பிரிட்டன் ஆயுத விற்பனை மற்றும் கட்டுப்பாடுக் கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை, அரசு கூறுவதற்கு மாறாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x