

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் அமெரிக்க படையினருக்கு எரி பொருள் சப்ளை செய்து வந்த நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் தீயில் கருகின.
இதுகுறித்து, காபூல் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஹஷ்மத் ஸ்டானிக்சாய் கூறிய தாவது:
தலைநகர் காபூலுக்குள் நுழை வதற்காக, மேற்குப் பகுதியில் உள்ள சாக்-இ-அரகாந்தி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்த மான நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, அப்பகுதியில் குண்டு வெடித்ததில் லாரிகள் தீப்பிடித்து எரிந்தன.
தகவல் அறிந்து வந்த தீயணைப் புத் துறையினர் சனிக்கிழமை காலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், அனைத்து லாரிகளும் எரிந்து சேத மடைந்தன. இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காபூல் காவல் துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் குல் அகன் ஹஷிமி கூறும்போது, “டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததற்கு காந்த வெடிகுண்டுகளே காரணம்” என்றார்.
இதுகுறித்து ஒரு லாரி ஓட்டுநர் ஜனத் குல் கூறும்போது, “என் னுடைய லாரிக்குள் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீ ரென பயங்கர சத்தம் கேட்டது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்றார்.
தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண் டுள்ளது.