''பாகிஸ்தான் திவாலாகிவிட்டது'' - வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிப்

கவாஜா முகமத் அசிப்
கவாஜா முகமத் அசிப்
Updated on
1 min read

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது என்றும், திவாலாகிவிட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முமகத் அசிப் தெரிவித்துள்ளார்.

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்தது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், இறைச்சி 750 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமத் அசிப், “பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைவரும் பொறுப்பு. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். நமது பிரச்சினைகளுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது. பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in