

இனி உலக தலைவர்கள் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொலைபேசியில் பேசும் போது ராஜாங்க ரீதியிலான தகவல்கள் கசிகிறது. இதனால் பல்வேறு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே ட்ரம்ப் தரப்பில், நேரடியாக தொடர்பு கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மெக்சிக்கோ, கனடா, பிரான்ஸ் அதிபர்களுக்கு ட்ரம்ப் தனது தனிப்பட்ட எண்ணை வழங்கியுள்ளதாக அமெரிக்க அரசின் செய்தி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் உலகத் தலைவர்களிடத்தில் நடத்தும் உரையாடல்கள் வெளியேறுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.