Published : 18 Feb 2023 10:00 AM
Last Updated : 18 Feb 2023 10:00 AM

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் அவதூறு பிரச்சாரம் இருநாட்டு உறவை சிதைப்பது போல் உள்ளது: இங்கிலாந்து எம்.பி. பாப் பிளாக்மேன் வருத்தம்

லண்டன்: ‘‘பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் அவதூறு பிரச்சாரமாக உள்ளது. இது முற்றிலும் வருத்தத்தக்குரியது. இது இங்கிலாந்து-இந்தியாவின் உறவை பிபிசி சிதைப்பது போல் உள்ளது’’என இங்கிலாந்து எம்.பி பாப்பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தும் வகையில் பிபிசி ஆவணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட் டது. இதை இந்தியாவில் வெளி யிடுவதற்கும், சமூக ஊடகங்களில் பகிரவும் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலு வலகங்களில் வருமான வரித்துறை 3 நாட்களாக தொடர் சோதனை நடத்தியது. இதில் பிபிசியின் நிதிபரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி பாப் பிளாக்மேன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிபிசி இங்கிலாந்து அரசின் கருத்துக்களை தெரிவிக்கும் செய்திநிறுவனம் அல்ல. இந்த ஆவணப்படம் அவதூறு பிரச்சாரம். தரமற்றசெய்தி. இந்த ஆவணப்படம்முழுவதும் ஒருவரை மறைமுகமாக தாக்குவது போல் உள்ளது. இந்த ஆவணப்படத்தை பார்ப்பவர்கள், இது உண்மையாக இருக்குமோ என நினைப்பார்கள். வெளியில் உள்ள ஓர் அமைப்பு தயாரித்து இந்த ஆவணப்படத்தை பிபிசி மேற்பார்வையிட்டுள்ளது. இது உண்மைக்கு மாறானது. இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். இது இந்திய-இங்கிலாந்து உறவைசிதைப்பதுபோல் உள்ளது. பிபிசி-க்கு உலகம் முழுவதும் நன்மதிப்பு உள்ளது. இந்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருக்க கூடாது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குஜராத் கலரவத்துக்கான காரணங்கள், இந்த ஆவணப்படத்தில் விரிவாக காட்டப்படவில்லை. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதாரம் இல்லை என கூறியது பற்றி இந்த ஆவணப்படத்தில் எதுவும் இல்லை. 2002-ம்ஆண்டு கலவரத்தின்போது, அமைதியை நிலைநாட்ட, குஜராத் முதல்வராக மோடி சிறப்பாக செயல்பட்டுள்ளார். பிபிசி நிறுவ னத்தின் வரி ஏய்ப்பு ஒன்றும் புதிதல்ல. ்அது சில காலமாகவே நடைபெறுகிறது.

இவ்வாறு இங்கிலாந்து எம்.பி பாப் பிளாக்மேன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x