Published : 01 Jul 2014 01:05 PM
Last Updated : 01 Jul 2014 01:05 PM

வேகமாக அழிந்து வரும் சக்கரவர்த்தி பெங்குயின்கள்: நூற்றாண்டு இறுதிக்குள் பெருமளவு அழியும் அபாயம்

அண்டார்க்டிக் பகுதியில் வசித்து வரும் சக்கரவர்த்தி பெங்குயின்கள் (எம்பரர் பெங்குயின்) பருவநிலை மாற்றத்தால் வேகமாக அழிந்து வருகின்றன என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கா விட்டால் இந்நூற்றாண்டின் இறு திக்குள் மூன்றில் இரண்டு பங்கு சக்கரவர்த்தி பெங்குயின்கள் வாழிடத்தில் 50 சதவீதத் துக்கும் அதிகமான பெங்குயின்கள் அழிந்து விடும் என ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இந்த வகை பெங்குயின்களை வேகமாக அழியும் பறவையினப் பட்டியலில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சக்கர வர்த்தி பெங்குயின்கள் தங்களின் வாழிடச் சூழலுக்கு கடல் பனிப் பாறைகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. பருவ நிலை மாறுபாட்டால், கடல் பனிப் பாறைகள் உருகுவதால் சக்கர வர்த்தி பெங்குயின்களில் வாழ் வியல் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐசி எனப்படும் கடல் பனிப்பாறைகள் கவனக கணக் கீட்டின்படி எதிர்காலத்தில் பனிப் பாறையின் அளவு குறையுமென்ற அடிப்படையில், இந்நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் உள்ள சக்கரவர்த்தி பெங்கு யின்களின் எண்ணிக்கை பாதிக் கும் மேல் குறையும் என அஞ்சப் படுகிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவி லுள்ள வுட்ஸ் ஹோல் கடலியல் நிறுவன (டபிள்யூஎட்ஓஐ) உயிரியல் அறிஞர் ஸ்டீபன் ஜெனோவ்ரியர் கூறியதாவது:

ஐபிசிசி கணித்துள்ள பருவநிலை மாற்றத்தால் கடல் பனியின் அளவு குறைவு விகிதத்தின் படி, கடல் பனி குறைந்தால் அது சக்கரவர்த்தி பெங்குயின்களைப் பெரு மளவு பாதிக்கும். கடந்த 20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டு களில் எந்த அளவுக்குப் பாதிப்பு இருந்ததோ அதே அளவுக்கு பாதிப்பு இருக்கும். 21-ம் நூற்றாண்டின் இறுதியில் தென்கோடியில் உள்ள ரோஸ் கடல் பகுதி கூட, பெங்குயின்களுக்கான நம்பத்தகுந்த வாழிடமாக இருக்காது” என்றார்.

இதற்கு முந்தைய ஆய்வு கிழக்கு அண்டார்க்டிகாவில் உள்ள டெர்ரி அடிலெய் பகுதி யில் நடத்தப்பட்டது. அதில், கிடைத்த எண்ணிக்கையின் அடிப்படை யில் தற்போதைய ஆய்வு ஒப்பிடப் பட்டுள்ளது. அண்டார்க்டிகாவில் சக்கரவர்த்தி பெங்குயின்கள் 45 வாழிடங்களில் வசிக்கின்றன.

இந்த வாழிடங்கள் பருவநிலை மாற்றத் தால் எவ்வகையில் பாதிக்கப் படும் என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை இயற்கைப் பருவநிலை மாற் றம் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x