

ஊழல் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ், அவரது மகன்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் நவாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹூசைன், ஹாசன் ஆகியோர் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும் வரிஏய்ப்பு செய்து தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு ஆதாரமாக உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் பட்டியலில் நவாஸ் குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தர வின்படி கூட்டு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு சார்பில் 13 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நவாஸுக் கும் அவரது 2 மகன்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.