

தென்கொரியாவில் நிறுவப்பட் டுள்ள அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு சாதனத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா ஏவுகணைகளை வீசினால் அதை நடுவானில் தடுத்து நிறுத்தி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஹுனாங், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தாட் எனப்படும் ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது. இதனை உடனடி யாக அகற்ற வேண்டும். இல்லை யெனில் சீனாவின் தற்காப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாட் ஏவுகணை தடுப்பு சாதனத்துக்கு ரஷ்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.