

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை தூதரக ரீதியில் தனிமைப்படுத்தவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் நட வடிக்கைகளிலும் ஈடுபட இந்தியா பரிசீலித்து வருவதாக, அமெரிக்க ராணுவ உளவு அமைப்பின் தலைவரான வின்சென்ட் ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையின் ராணுவ சேவைக் குழு உறுப்பினர்களிடம் அவர் கூறியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைப் பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவ தால், அதனைத் தடுக்கும் முயற்சி யிலும், எதிர் தாக்குதலை நடத்த வும் இந்தியா தயாராகி வருகிறது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தூதரக ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து மேற் கொண்டுள்ளது.
எல்லைப் பகுதிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத் தில் தனது நிலைகளைப் பாது காக்கும் வகையில், ராணுவத்தை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.
இந்தியா, ஆசியா முழுவதும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கை களையும், பொருளாதார நலன் களை வலுப்படுத்தும் விஷயங் களிலும் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, காஷ்மீர் வன்முறை மற்றும் இருநாடு களும் மாறி மாறி சுமத்தும் குற்றச்சாட்டுகளால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவை மிகவும் மோசமானதாக்கும்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாதி களுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கையை வெளிப்படையா கவே தொடங்கியது.
2016-ம் ஆண்டு முழுவதும் எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்தது.
அதேநேரம், பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் மேற்குப் பகுதியில் தற்போது மேற்கொண்டு வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை நடப்பாண்டு நாடு முழுவதும் தொடங்கும். அதேநேரம் தீவிரவாதக் குழுக்கள், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து சமாளிக்கும்.
மேலும், பாகிஸ்தான் அணு ஆயுத பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தீவிர வாதிகளால் தங்களுடைய அணு ஆயுதங்களுக்கு எச்சரிக்கை உள்ளது என்பதையும் அந்நாடு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராணுவ நிதி குறைப்பு
பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு ராணுவ நிதியாக வழங்கவிருந்த ரூ.1,651 கோடியை, ரூ.647 கோடியாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தவிர இந்த தொகையை கடனாக வழங்கவும் ஆலோசித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ரூ.3,459 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் வெளிநாட்டு ராணுவ நிதியாக ரூ.1,651 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.