

ஐநா. அமைதிப் படையில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம் என்று அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் நினைவு தினம் நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது:
ஐ.நா. அமைதிப் படையில் 124 நாடுகளைச் சேர்ந்த 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7600-க்கும் மேற்பட்டோர் இந்திய வீரர்கள் ஆவர். அவர்கள் ஆப்கானிஸ்தான், காங்கோ, ஹைத்தி, லெபனான், லைபிரீயா, மத்திய கிழக்கு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம். அதற்காக அந்த நாட்டை பாராட்டுகிறேன் என்றார்.