2019 முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணம்

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங் களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு..

பிரதமர் மோடி 2019 முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார், இந்தப் பயணங்களுக்காக ரூ.22 கோடியே 76 லட்சத்து 76,934 செலவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், 2019-ம் ஆண்டு முதல் இந்தப் பயணங்களுக்காக ரூ.6 கோடியே 24 லட்சத்து 31,424 செலவிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் 8 பயணங்களில் 7 பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டார், தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து பயணம் சென்றார்.

இதே காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 86 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவரது பயணங்களுக்கு அரசு ரூ.20 கோடியே 87 லட்சத்து 1,475 செலவிட்டுள்ளது. 2019 முதல், பிரதமர் மோடி ஜப்பானுக்கு 3 முறையும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 முறையும் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in