

சோமாலிய தலைநகர் மொகதிஷு வில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பசியால் தவித்து வருகின்றனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதா வது:
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா வில் தற்போது கடும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் மொகதிஷுவில் சுமார் மூன்றரை லட்சம் பேர் பசியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு போதிய உணவு அளிக்க முடிய வில்லை.
அந்த நாட்டில் 2011-ல் ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இரண்டரை லட்சம் பேர் உயிர்பலி யாகி உள்ளனர். தற்போதைய பஞ்சத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
தலைநகர் மொகதிஷு உள்பட முக்கிய நகரங்களில் ஊட்டச் சத்து பற்றாக்குறை பெரும் பிரச்சி னையாக உள்ளது. இதனால் குழந் தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் அல்-காய்தாவுடன் தொடர்புடைய அல்-சபாப் தீவிரவாதிகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருவதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. போரில் உயிரிழப்போரின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.