ரஷ்யா, எப்பிஐ.தான் தோல்விக்கு காரணம்: ஹிலாரி குற்றச்சாட்டு

ரஷ்யா, எப்பிஐ.தான் தோல்விக்கு காரணம்: ஹிலாரி குற்றச்சாட்டு
Updated on
1 min read

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால் நான் அதிபராகி இருப்பேன். அதற்கு அடுத்த நாள் சில கேலித் தனமான சூழல்கள் உருவானதால் எனது வெற்றி பறிபோனது. எப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமேவும், ரஷ்யாவின் விக்கிலீக்ஸும் எழுப்பிய சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எனக்கு இருந்த செல்வாக்கை சரிய வைத்துவிட்டது.

இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடும் அதிகமாக இருந்தது. எனது தனிப்பட்ட இ-மெயில் விவரங் களை ஹேக் செய்து, விக்கிலீக்ஸ் உறுதுணையுடன் வெளியிட்டது. ரஷ்ய அதிபர் இந்த தேர்தலில் நேரடியாகவே தலையிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in