

போதைப் பொருளான மரிஜுவானாவை (கஞ்சா) உற்பத்தி செய் யலாம், விற்கலாம். உலகிலேயே இப்படி ஒரு சட்டத்தை இயற்றிய முதல் நாடு உருகுவேதான்.
தென்னமெரிக்காவிலுள்ள இந்த நாட்டில் எதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டது? அருகி லுள்ள பராகுவே நாட்டிலிருந்து போதைப் பொருள்கள் மிக அதிகமாக உருகுவே நாட்டுக்குள் வந்து கொண்டிருந்தன. இதைத் தடுக்கத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்காக வரைமுறையின்றி கஞ்சா தாவரங்களை வளர்த்துவிட முடியாது. அதிகபட்சம் ஒரு வீட்டில் இதுபோன்ற ஆறு தாவரங் களைத்தான் வளர்க்கலாம்.
உருகுவே நாட்டில் 10 சதவீதம் பேராவது கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். மாதத்துக்கு 40 கிராம் வரை இந்த போதைப் பொருளை யார் வேண்டு மானாலும் உட்கொள்ளலாம்.
அரசு அனுமதித்ததும் 6,600 பேர் தங்கள் வீட்டில் கஞ்சா தாவரங்களை வளர்ப்பதற்கு விண்ணப்பித்து அனுமதி பெற் றிருக்கிறார்கள். தனி நபர்களும், கிளப்களும் இந்தத் தாவரங்களை வளர்த்தாலும் அவற்றை அரசின் மூலமாக மட்டுமே விற்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் லாபம் பகிர்ந்து கொள்ளப்படும்.
5 கிராம் பாக்கெட்டாகதான் இதை விற்க வேண்டும் என்பதி லிருந்து, அதிகபட்சம் எவ்வளவு அடர்த்தியாக அந்த போதைப் பொருள் இருக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை விதித் திருக்கிறது அரசு. தவிர விலையை யும் அரசே நிர்ணயிக்கிறது
விற்பனை எப்படி நடக்கும்?
மருந்தகங்களுக்கு முன்னுரிமை கொடுக்க எண்ணுகிறது அரசு. அவற்றைக் கண்காணிப்பது எளிது என்பதால் சட்ட மீறலான விஷயங்கள் நடைபெறுவதைத் தடுத்து விடலாம் என்ற எண்ணம்.
ஆனால், உருகுவே நாட்டிலுள்ள ஆயிரத்துக்கும் மேற் பட்ட மருந்தகங்களில் 30 மட்டுமே இப்படி போதை மருந்துகளை விற்பதற்கு விண்ணப்பத்துள்ளன. காரணம், போதை மருந்து மாஃபியா கும்பல் தங்களுக்கு போட்டியாக வரும் எவரையும் அழித்து விடும் என்று பயம். (வெளிச்சந்தையில் பலமடங்கு அதிக விலையில் போதைப் பொருள்கள் விற்கப்படு கின்றன என்பது வெளிப்படை).
இதற்காக உருகுவே அரசு ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. பதிவு செய்துகொண்டு அரசின் சட்டதிட்டப்படி போதைப் பொருளை விற்கும் மருந்தகங் களில் ஸ்பெஷல் அலாரங்கள் பொருத்தப்படும். இவற்றை அழுத் தினால் அருகிலுள்ள காவல் நிலை யத்துக்கு தகவல் சென்றுவிடும். அவர்கள் உடனடியாக வரு வார்கள். ஆனால், அதைவிட உடனடியாக உயிர் போய்விடுமே என்ற அச்சம்தான் இன்னமும்கூட பல மருந்தக உரிமையாளர்களைத் தயங்க வைக்கிறது.