

பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தொலைக்காட்சியில் நேற்று காலை பேசியதாவது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் தலா ரூ.18 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 11 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டர் ரூ.249.80-க்கும், ஹை-ஸ்பீட் டீசல் ரூ.262.80-க்கும், மண்ணெண்ணெய் ரூ.189.83-க்கும், லைட் டீசல் ஆயில்லிட்டர் ரூ.187-க்கும் விற்பனை செய்யப்படும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.