பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நியூயார்க்: ’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரம் தான் இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து அறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

மேலும், ’2023 BU’ விண்கல் பூமிக்கு சுமார் 3,600 கிமீ நெருக்கத்தில் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் பூமியையும், அதன் மேற்பரப்பில் உள்ள சாட்டிலைட்களையும் இந்த விண்கல் மோதும் வாய்ப்பு குறைவு என்றும் அது மோதியிருந்தாலும் அதனால் ஏற்படும் பதிப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் பல விண்கல்கள் பூமியை வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடுகையில் ’2023 BU’ விண்கல் 10 மடங்கு நெருக்கத்தில் பூமியை கடந்து சென்றிருக்கிறது.

விஞ்ஞானிகள் தினமும் பூமிக்கு அருகே உள்ள விண்கற்களை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலனவை ஆபத்தானவை அல்ல. சில நேரம் ஆபத்தான விண்கற்களும் பூமியை நோக்கி வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in