அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு

விற்பனைக்கு வந்துள்ள தீவு
விற்பனைக்கு வந்துள்ள தீவு
Updated on
1 min read

நிகராகுவா: மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது.

நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதை தீவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில், மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு இடம் பெற்றுள்ளதாம். நீச்சல் குளம் அமைக்கும் வசதியும் உள்ளதாம். சுற்றிலும் தென்னை மற்றும் வாழை மரங்களும் சூழ்ந்துள்ளதாம்.

அனைத்து திசைகளிலும் நீலம் - பச்சை நிறத்திலான தெளிந்த நீர் சூழ்ந்திருப்பது பார்க்கவே ரம்மியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்கவும், இரவு நேர காட்சிகளும் வியக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in