

துருக்கியில் அதிபர் ரிசப் தய்யிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூலை 15-ம் தேதி சில ராணுவ அதிகாரிகள் முயற்சி செய்தனர். இந்த முயற்சியை பொதுமக்களும் ராணுவத்தின் மற்றொரு பிரிவினரும் இணைந்து முறியடித்தனர்.
இது தொடர்பாக பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 29 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு இஸ்தான்புல் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராணுவப் புரட்சி நடந்தபோது அதிபரின் இல்லத்தைப் பாதுகாக்குமாறு பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் தங்கள் கடமையைச் செய்யத் தவறிய துடன் புரட்சிக்கு உதவியதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டது.