நைஜீரிய தீவிரவாதிகள் பிடியில் இருந்து 60 பெண்கள் தப்பித்தனர்

நைஜீரிய தீவிரவாதிகள் பிடியில் இருந்து 60 பெண்கள் தப்பித்தனர்
Updated on
1 min read

நைஜீரியாவில் கடந்த மாதம், போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களில் 60-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி அவரவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து போர்னோ மாகாண உயர்நிலை கண்காணிப்பாளர் அப்பாஸ் காவா கூறுகையில்: "தீவிரவாதிகள் சண்டையிடுவதற்காக வெளியே சென்றிருந்த போது பெண்கள் சாதுர்யமாக தப்பியுள்ளனர்" என்றார்.

இதற்கிடையில், பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ் (Bring Back Our Girls) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட இளம் பெண்களை மீட்கக் கோரி, தலைநகர் அபுஜாவில் உள்ள அதிபர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நைஜீரியாவின் வடக்கு பிராந்தியத்தை பிரித்து தனி இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தி வரும் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in