

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங், சீன ராணுவத் தலைவரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள விக்ரம் சிங், சீன ராணுவத் தலைவர் பாங் பெங்குய்யை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
விக்ரம் சிங்கின் வருகை குறித்து சீன ராணுவம் விடுத்துள்ள செய்தியில், “இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே உயர் நிலையிலான தொடர்பை வலுப்படுத்துவதும், பரஸ்பரம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்குமான முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
பிராந்திய அளவிலான பாதுகாப்பு நிலை குறித்தும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் குறித்தும் இரு ராணுவ உயர் அதிகாரிகளும் பேசினர்” என்று கூறப்பட்டுள்ளது.சீன ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெனரல் பான் சாங்லோங், சீன துணை அதிபர் லீ யுவான்சாவோ, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜாங் யெசுய் ஆகியோரை விக்ரம் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.