

தீவிரவாதிகள் ‘ஹேக்கிங்’ தொழில் நுட்பத்தின் மூலம் அணு மின் நிலைய கணிப்பொறிக்குள் ஊடுருவி ஆபத்தான கதிர்வீச்சுக் களைப் பரவச் செய்யும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் எச்சரித்துள் ளார்.
தீவிரவாதக் குழுக்கள் மற்றும் கிரிமினல்கள் இடையே, அணு ஆயுதம், வேதியியல் மற்றும் உயிரி ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. கவுன்சில் கூட்டம் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங் களைத் தீவிரவாதக் குழுக்களும், கிரிமினல்களும் பெறுவதை தடுப்பதற்கு உலக நாடுகள் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதை கண்காணிக்கும் ஐ.நா. கவுன்சில் கமிட்டியின் பணிகளை வலுப் படுத்தும் தீர்மானம் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் பேசும்போது, ‘3டி பிரிட்டிங் தொழில்நுட்பம், தொலை தூரத்திலிருந்து ரகசியமாக வேவு பார்க்க உதவும் ஆளில்லா உளவு விமானங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங் களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் அதிகரித்துள் ளது.
குறிப்பாக, ஹேக்கிங் தொழில் நுட்பத்தின் மூலம், அணு மின் நிலையங்களில் உள்ள கணிப் பொறி கட்டமைப்புக்குள் ஊடுருவி, ஆபத்தான கதிர்வீச்சு களை பரவச் செய்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான அபாயச் சூழல் தற்போது அதிகரித்து வருகிறது.
அணுமின் நிலையங்களில் ஆக்கப்பூர்வ தேவைகளுக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள, கதிரி யக்கப் பொருட்களை, அழிவுக்கான அணு ஆயுதங்களை உருவாக்க பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவற்றை பாதுகாப்பது குறித்த நியாயமான கவலைகள் எழுந்துள்ளன.
மேலும், உயிரி ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுப் பதற்கான கட்டுப்பாடுகளை விஞ்சும் அளவுக்கு தற்போது நவீன தொழில்நுட்பங்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டன. எனவே, இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை’ என்றார்.