

பாகிஸ்தானுக்கு ரூ.6,121 கோடி பொருளாதார நிதி உதவி வழங்க வகை செய்யும் ராணுவ மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
பாகிஸ்தானில் உள்ள ஹக்கானி தீவிரவாத முகாம்களை அழிப்பதற்காக அந்நாட்டுக்கு பொருளாதார உதவி வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.2,040 கோடி வழங்க பராக் ஒபாமா நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டர் முட்டுக்கட்டை போட்டதால் நிதியுதவி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு மொத்தமாக ரூ.7,481 கோடி நிதியுதவி வழங்க வகை செய்யும் ராணுவ மசோதா நேற்று முன் தினம் பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.
எனினும் மசோதாவின்படி, அந்தத் தொகையில் இருந்து ரூ.6,121 கோடி மட்டுமே பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. இது சர்ச்சைக்குரிய மசோதா என்பதால், அடுத்த வாரம் செனட் சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு இரு தரப்பு உறவில் நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக இம்மசோதா நிறை வேற்றப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
அமெரிக்காவின் ராணுவ சேவைகள் குழுத் தலைவர் ஜான் மெக்கெயின் கூறும்போது, ‘‘அமெரிக்காவின் தேசிய பாது காப்பு நலன் சார்ந்த விவகாரங் களுக்கு நேரடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானின் பாதுகாப்பு விவ காரங்களில் கவனம் செலுத்தப் படுகிறது’’ என்றார்.