Last Updated : 22 Dec, 2016 02:35 PM

 

Published : 22 Dec 2016 02:35 PM
Last Updated : 22 Dec 2016 02:35 PM

பாகிஸ்தான் ராணுவ அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த உதவியதா?

2016-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் காண முடிந்தது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக விளங்கிய காமர் ஜாவத் பஜ்வா பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பதவியேற்று எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் தணிக்கப்படும் என உறுதியளித்தார்.

அடுத்த முக்கிய முன்னேற்றமாக, உளவுத்துறை மூத்த அதிகாரியான நவித் முக்தர் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவ அமைப்பில் முக்கிய பிளவாக, புலனாய்வு துறையில் தலைமை பதவி வகித்த ரிஸ்வான் அக்தர் அதிரடியாக நீக்கப்பட்டு முக்தார் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

ரஷ்யாவுடான பாகிஸ்தானின் உறவு

2016-ல் குறிப்பிட்டு செல்லுபடியாக, பாகிஸ்தான் ரஷ்யாவுடன் வலுவான உறவை உண்டாக்கிக் கொண்டது.

கடந்த செம்படம்பர் மாதம், முதல் முறையாக ரஷ்யா - பாகிஸ்தான் ராணுவ படைகள் இணைந்து ராணுவம் பயிற்சிகள் நடத்தின. மேலும் ராணுவ ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவும் ஆரம்பித்தது ரஷ்யா.

2016 டிசம்பர் மாதம் பனிப்போர் புரிந்து வந்த, ரஷ்யாவுடன் இணைந்து உலகளாவிய பிராந்திய பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்றது பாகிஸ்தான்.

அமெரிக்காவின் தொடர் அழுத்தம்

ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் உறவுகளுக்கிடையான நெருக்கம், இந்தியா - அமெரிக்க உறவில் நெருக்கம் ஏற்பட வழிவகுத்தது.

தீவிரவாதிகளின் பாதுகாப்பு உறைவிடமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க தொடர்ந்து பாகிஸ்தானின் மீது அழுத்தம் கொடுத்து வந்தது.

இதற்கு சான்றாக கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கும் கூட்டணி ஆதரவு நிதியை ஆப்கன் தீவிரவாதம் இயக்கங்களின் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கும் வரை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.

அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து பேசும்போது "வருகின்ற 2017-ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்படுவது இந்தியாவின் நடவடிக்கையை பொறுத்தது.

இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த தயராக உள்ளதை தெரியபடுத்தி,காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தீர்க்க தீவிரத்தை காட்ட வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x