Published : 22 Dec 2022 06:04 AM
Last Updated : 22 Dec 2022 06:04 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டு உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் அந்த ஆண்டு முதல் நேற்று வரை கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியே 3 ஆயிரத்து 814. இது உலகிலேயே மிக அதிகம். மொத்த உயிரிழப்பு 10,88,236. இதுவும் உலகிலேயே மிக அதிகம்.
அமெரிக்க மாகாணங்களில் அதிக அளவாக கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சம். 2-வது இடத்தில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 81 லட்சம், 3-வது இடத்தில் உள்ள புளோரிடாவில் 73 லட்சம், நியூயார்க்கில் 65 லட்சம் பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உலகளவில் 15 சதவீதமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை உலகளவில் 16 சதவீதமாகவும் உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 கோடியை எட்டியது. கடந்த ஜனவரி 9-ம் தேதி 6 கோடியையும், ஜனவரி 21-ல் 7 கோடியையும், மார்ச் 29-ல் 8 கோடியையும், ஜூலை 21-ல் 9 கோடியையும், தற்போது 10 கோடியையும் கடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT